கேரள தங்கக் கடத்தல் விவகாரம்… பிலீவர்ஸ் சர்ச்சுக்கும் முதல்வர் பினராயிக்கும் என்ன தொடர்பு? பரபரப்பு ஆடியோவை வெளியிட்ட ஸ்வப்னா!
Author: Udayachandran RadhaKrishnan11 June 2022, 2:40 pm
கேரள தங்க கடத்தல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முதல்வர் பினராயி விஜயனின் மத்தியஸ்தர் ஷாஜ் கிரணுடன் நடத்திய உரையாடல் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்தியாவை உலுக்கில் தங்க கடத்த விவாகரத்தில் ஜாமீனில் வெளியே வந்த ஸ்வப்னா சுரேஷ் இ தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இந்த வழக்கில் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன், முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை தேசிய பாதுகாப்பு முகமை, சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரித்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த வாக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்ன சுரேஷ், கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதில் இந்த வழக்கில் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீணா, முதலமைச்சரின் செயலாளர் ரவீந்திரன், அப்போதைய தலைமை செயலாளர் நளினி நேட்டோ, அப்போ அமைச்சர் ஜலீல் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை முதலமைச்சர் பினராயி மறுத்திருந்தார். இது அரசியல் உள்நோக்கத்திற்காக புனையப்பட்ட குற்றச்சாட்டு என்றும், மக்கள் ஏற்கனவே நிராகரித்து விட்டதாகவும், இதுபோன்ற பொய் கூறுவதால் அரசு மற்றும் ஆட்சியாளர்களின் உறுதியை குலைக்க சதி நடப்பதாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் முதலமைச்சர் பதவியில் இருந்து பினராயி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாலக்காட்டில் ஸ்வப்னா சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஒரு ஆடியோவை வெளியிட்டார். அந்த ஆடியோவில் பினராயி விஜயனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் ஷாஜ் கிரண், ஸ்வப்னா சுரேஷுடன் பேசுவது போல் உள்ளது. அதில், நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளித்தது ஏன்? தங்க கடத்தலில் முதலமைச்சர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு தொடா்புள்ளது என்ற குற்றச்சாட்டை பினராயி விஜயன் சகித்துக்கொள்ள மாட்டாா். எனவே, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஸ்வப்னா சுரேஷிடம் ஷாஜ் கிரண் பேசுவது பதிவாகியுள்ளது.
மேலும் பேசிய ஸ்வப்னா சுரேஷ், முதல்வர் பினராயி விஜயன், சி.பி.எம் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் ஆகியோர் பிலீவர்ஸ் சர்ச் (Believers church) மூலம் அமெரிக்காவில் ஃபண்டுகளைக் கொண்டு சேர்த்துள்ளனர். அதனால்தான் பிலீவர்ஸ் சர்ச்சுக்கு எஃப்.சி.ஆர்.ஏ (ஃபாரின் கான்ட்ரிபியூஷன் ரெகுலேசன் ஆக்ட்) ரத்துசெய்யப்பட்டது என தெரிவித்தார்.
இது தொடர்பாக ஷாஜ் கிரண் கூறும்போது, ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்டுள்ள ஆடியோவில் திருத்தம் உள்ளது,. உண்மையான ஆடியோ நான் வெளியிடுவேன், அந்த உரையாடலில் கேட்டால் மட்டுமே உண்மை புலப்படும் என தெரிவித்துள்ளார்.