திருமணத்திற்கு ‘சுந்தரா டிராவல்ஸ்’ போல அரசுப் பேருந்தை அலங்கரித்து சென்ற சம்பவம்: பாடம் புகட்டிய போக்குவரத்து துறை..!!

Author: Vignesh
7 November 2022, 12:45 pm

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே நெல்லிக்குழி திருமண நிகழ்ச்சிக்கு கேரள அரசு பேருந்து அலங்கரித்து சென்ற விவகாரம் தொடர்பாக, ஓட்டுநரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கண்ணாடியை மறைத்து வாழை தோரணங்கள் கட்டியதால் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் குறைந்த செலவில் சுற்றுலா திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் எர்ணாகுளம் அருகே நெல்லிக்குழி பகுதியில் இருந்து இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதிக்கு திருமணத்திற்கு செல்ல மணமகன் வீட்டார் அரசு பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்தனர்.

kerala bus - updatenews360

இதனை தொடர்ந்து பேருந்து முழுவதும் வாழை தோரணங்களால் அலங்கரித்து சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இன்றைய தினம் ஓட்டுநரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

மேலும், கண்ணாடியை மறைத்து வாழை தோரணங்கள் கட்டியதால் பாதுகாப்பு கேள்வி குறி ஏற்பட்டுள்ளதாக கூறி ஓட்டுநர் மீது காவல் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 647

    0

    0