நீங்க மட்டும்தா குறைப்பீங்களா? நாங்களும் குறைப்போம் : பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தது கேரள அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2022, 12:57 pm

கேரளா : மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த நிலையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது.

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்த வரிக்குறைப்பின் மூலம் பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ. 9.5 மற்றும் டீசல் ரூ.7 குறையும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கேரளாவில் பெட்ரோல் மீதான வாட் வரியில் ரூ.2.41, டீசல் மீது ரூ.1.36 குறைத்து கேரள அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த நிலையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையை கேரள அரசு வரவேற்பதாக கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார்.

  • Sexual Harassment to Famous TV Actress சின்னத்திரையிலும் பாலியல் சீண்டல்…பிரபல நடிகரின் மகள் சீரியலில் இருந்து விலகல்!