திடீரென காரை மடக்கிய ஆளுங்கட்சியினர்… சட்டென காரை விட்டு இறங்கி ஆளுநர் கொடுத்த சவுண்டு ; SFI மாணவர்கள் ஷாக்..!!

Author: Babu Lakshmanan
12 December 2023, 2:35 pm

கேரளாவில் தனது காரை மடக்கிய SFI மாணவர்களுக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான், காரில் இருந்து இறங்கிச் சென்று பதிலடி கொடுத்தார்.

திருவனந்தபுரத்தில் நேற்று இரவு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இந்திய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆளுநரின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதனால், கோபம் அடைந்த ஆளுநர் ஆரிஃப் முகமது கான் காரில் இருந்து கீழே இறங்கி, ‘கிரிமினல்ஸ்’ எனக் கூறியபடி ஆவேசமாக பேசினார்.

அப்போது, கேரள மாநில அரசு தனக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும், இது முதல்வரின் சதி எனக் கூறிய அவர், தனக்கு உடல் ரீதியாக காயம் ஏற்படுத்த முதல்வர் பினராயி விஜயன் ஆட்களை அனுப்புவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

கேரள அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?
  • Close menu