ஹனி டிராப் மூலம் முதியவரிடம் இருந்து மிரட்டி 11 லட்சம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் மலையாள சீரியல் நடிகை உள்பட ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் பணம் படைத்த முதியவர்களை குறி வைத்து சமூக வலைதளங்கள் மூலமாக நண்பர்களாகி ஆசை வார்த்தை கூறி பணம் பறிக்கும் ஹனி ட்ராப் என அழைக்கப்படும் சம்பவம் கேரளாவில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
அந்த வகையில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மலையாளப்புழா பகுதியைச் சேர்ந்த நித்யா சசி. இவர் பிரபல மலையாள சீரியல்களில் நடிகையாக நடித்து வருகிறார். இவருடன் கலைக்கோடு பரவூர் பகுதியைச் சேர்ந்த பினும் என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் பேட்டை பகுதியில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரரான வயதான முதியவரை ஹனிட்ராப் செய்து தனியாக அறைக்கு அழைத்து வந்து நிர்வாணப்படுத்தி சில்மிஷ வீடியோக்களை பதிவு செய்துள்ளனர். இதை அடுத்து வீடியோ காட்சிகளை இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி பல முறையாக மிரட்டி 11 லட்சம் பணம் பறித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் முதியவர் பரவூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். கேரளாவில் தொடர்ந்து ஹனி ட்ராப் சம்பவம் அரங்கேறி வரும் நிலையில், ஒரு சிலர் தான் இது குறித்த போலீசில் புகார் அளித்து வருகின்றனர்.
வயதான முன்னாள் ராணுவ வீரனான முதியவரின் நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி 11 லட்சம் ரூபாய் பறித்த சம்பவத்தில் சின்னத்திரை நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.