கள்ளக்காதலனுடன் உல்லாசம்… கரை ஒதுங்கிய பச்சிளம் குழந்தையின் சடலம்… விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!!

Author: Babu Lakshmanan
29 July 2023, 2:14 pm

திருவனந்தபுரம் ; கேரளாவில் கள்ளக்காதலனால் பிறந்த குழந்தையை பெற்ற தாயே கை, கால்களை வெட்டி கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருவனந்தபுரம் அருகே அஞ்சுதெங்கு கிராமப் பகுதியில் உள்ள கடற்கரையில் பிறந்த குழந்தையின் உடல் ஒன்று கை, கால்கள் உடைந்த நிலையில் ஒதுங்கியது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், குழந்தையின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், மீட்கப்பட்ட குழந்தையின் உடல், அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்த ஜூலி என்ற பெண்ணின் குழந்தை என தெரியவந்தது.

இதையடுத்து, ஜுலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது. 12 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த ஜூலிக்கு, அதே பகுதியை சேர்ந்த இளைஞரிடம் தகாத உறவு இருந்து வந்துள்ளது.

தகாத உறவின் மூலும் கர்ப்பம் தரித்து குழந்தை பிறந்ததாகவும், அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தால் அவதூறாக பேசுவார்கள் எனப் பயந்து, குழந்தையின் மூச்சை அடக்கி கொன்றது தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல், உயிரிழந்த குழந்தையின் கை, கால்களை உடைத்து, வீட்டிலேயே புதைத்ததும், 2 நாட்களுக்குப் பிறகு புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து கடற்பகுதியில் வீசியதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, ஜூலியை போலீசார் கைது செய்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ