25 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பெண்கள் பலி… கேரளாவில் அதிர்ச்சி… சோகமான ஓணம் பண்டிகை..!!!

Author: Babu Lakshmanan
25 August 2023, 6:21 pm

கேரளா; கேரளாவில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயநாடு அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 12 பேர் ஜீப்பில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரத்தில் இருந்த 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி