அடித்தது மழைக்கால பம்பர் பரிசு… ஒரே இரவில் கோடீஸ்வரர்களான 11 தூய்மை பணியாளர்கள்…!!

Author: Babu Lakshmanan
28 July 2023, 1:55 pm

கேரளாவில் லாட்டரில் 10 கோடி ரூபாய் பரிசு விழுந்ததால் ஒரே இரவில் 11 தூய்மை பணியாளர்கள் கோடீஸ்வரராக மாறியுள்ளனர்.

கேரளாவின் மலப்புரம் பரப்பனங்காடி பேரூராட்சிக்குட்பட்ட பசுமைப் படையான ஹரித கர்ம சேனாவைச் சேர்ந்த 11 தூய்மை பணியாளர்கள் கேரள லாட்டரி துறையின் லாட்டரியை தலா ரூ.25 கொடுத்து, ரூ.250க்கு டிக்கெட் வாங்கினர்.

நேற்று நடைபெற்ற குலுக்கலில் பரப்பனங்காடியைச் சேர்ந்த 11 தூய்மை பணியாளர்கள் வாங்கிய லாட்டரியில் ரூ.10 கோடி பரிசுக்கான மழைக்கால பம்பர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பரிசுத் தொகையை 11 பேரும் சரிசமமாக பகிர்ந்து கொண்டனர். இதன்மூலம், ஒரே இரவில் தூய்மை பணியாளர்கள் 11 பேரும் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?