மீடியா ஒன் விவகாரம்: மத்திய அரசின் தடையை உறுதி செய்த கேரள உயர்நீதிமன்றம்…

Author: kavin kumar
9 February 2022, 2:12 pm

மலையாள செய்திச் சேனலான மீடியாஒன் மீதான மத்திய அரசின் தடையை கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

மலையாள செய்திச் சேனலான மீடியாஒன் இஸ்லாமிய அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமிக்கு ஆதரவளிப்பதாகக் கண்டறியப்பட்டதையடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அண்மையில் சேனலை மூட உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவை ஜமாத்-இ-இஸ்லாமிக்கு சொந்தமான மீடியாஒனின் தலைமை நிறுவனமான மத்யமம் பிராட்காஸ்டிங் லிமிடெட் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. இதைஎதிர்த்து அந்நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரத்தி உயர்நீதிமன்றத்தில், மத்திய அரசின் உத்தரவுக்கு இரண்டு நாட்கள் தடை விதித்தது. பின்னர் இந்த தடை மேலும்
பிப்ரவரி 7ம் தேதி வரை நீடித்தது.

இந்த நிலையில் நேற்று மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.நாகரேஷ், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களில், புலனாய்வு அமைப்புகள் அளித்த பாதகமான உள்ளீடுகள் தீவிரமானவை என்றும் மத்திய அரசு சமர்ப்பித்த கோப்புகளை ஆய்வு செய்துவிட்டதாக கூறினார். இதைதொடர்ந்து, டிவிஷன் பெஞ்சில் மறுஆய்வு மனுவைச் சமர்ப்பிக்க சேனல் அதிகாரிகள் இரண்டு நாட்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை “ஒரு மணிநேரம் கூட அதை நீட்டிக்க முடியாது,” என்று கூறி அதனை நிராகரித்தார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1084

    0

    0