மாயமான பள்ளி ஆசிரியை… அக்காவை தேடி வீட்டுக்கு சென்ற தம்பிக்கு வீசிய துர்நாற்றம்… வசமாக சிக்கிய கணவர் ; கேரளாவை உலுக்கிய சம்பவம்!!

Author: Babu Lakshmanan
23 March 2023, 6:19 pm

மாயமான ஆசிரியை மர்மமான முறையில் வீட்டிலேயே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கேரளாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையைச் சேர்ந்தவர் விஜேஷ். இவருடைய மனைவி அனுமோள் (27), அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 17ம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அவர், மறுநாள் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இது பற்றி அனுமோளின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்கள் விஜேஷை தொடர்பு கொண்டு, ‘என்னாச்சு.. அனுமோள் எங்கே..?’ என்று கேட்டுள்ளனர். இதற்கு, அனுமோள் வழக்கம் போல பள்ளிக்கு சென்றுவிட்டதாக விஜேஷும் கூறியுள்ளார்.

விஜேஷின் பேச்சால் சந்தேகம் அடைந்த பெற்றோர், மகளை காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, தனது சகோதரியை பல இடங்களில் தேடி அலைந்து அனுமோளின் தம்பி அலெக்ஸ், அக்காவின் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது, கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் ஒரு கம்பளி போர்வையில் அனு மோளின் உடல் சுற்றி வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அலெக்ஸ் அதிர்ச்சியடைந்தார்.

இதனால், கதறி அழுத அவர், இது தொடர்பாக உடனடியாக கட்டப்பனை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அனுமோளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

இந்த தகவல் அறிந்ததும் கணவர் விஜேஷ் தலைமறைவானார். எனவே, அனுமோளை விஜேஷ் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கோணத்தில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Madha Gaja Raja movie review பொங்கல் ரேஸில்”மதகதராஜா”வெற்றி நடையா…கலக்கலான கமெண்ட்களை அள்ளி விடும் ரசிகர்கள்..!