அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ; நடுவே சிக்கிய ஓட்டுநர்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
12 June 2023, 3:47 pm

கேரளா ; கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் பகுதியில் உள்ள எம்சி சாலையில் கேரளா அரசு அதிவிரைவு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே ப்ளைவுட் பலகைகளை ஏற்றி சென்ற லாரி எதிர்பாராத விதமாக, நேருக்கு நேர் மோதியது. இவ்விபத்தில் இரு வாகனங்களில் ஓட்டுநர்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தால் அந்தச் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று சிதறி கிடந்த பிளைவுட் பொருட்களை அகற்றி வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்பு வாகன போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி கேமரா காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி காண்போரை அதிர வைத்து வருகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?