அசுர வேகத்தில் வந்த மினி லாரி… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!
Author: Babu Lakshmanan4 January 2024, 4:55 pm
கேரளா மாநிலம் போத்தன்கோடு அருகே மினி லாரி மோதி இருவர் படுகாயமடைந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் போத்தன்கோடு பகுதியில் உள்ள சாலையில் வந்த கொண்டிருந்த மினி லாரி ஆனது, கடையின் முன்பு சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மற்ற மூன்று கார்கள் மீது வேகமாக மோதியது. இதில், கடையில் இருந்து காய்கறி வாங்கி விட்டு வெளியே வந்த சேது என்பவர் மீதும், டியூசனுக்கு நடந்து கொண்டிருந்த ஒரு மாணவன் மீதும் மோதியது.
இதில் இருவரும் காயம் அடைந்த நிலையில் அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். மினி லாரி ஓட்டி வந்த டிரைவர் உறங்கி விட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து போத்தன்கோடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.