‘மலரே மவுனமா’… ஆபரேஷன் செய்யும் போது பாடல் பாடும் சிறுமி ; வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
30 July 2022, 4:53 pm

கேரளாவில் ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவரும் நோயாளியும் தமிழ் பாடல் பாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பரோக் பகுதியில் அரசு தாலுகா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வரும் முகம்மது ரயீஸ் என்ற மருத்துவர், 14 வயதான சிறுமிக்கு காலில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

அப்போது, சிறுமியிடம் வலி உள்ளதா என்று கேட்டார். வலிப்பதாக சிறுமி கூறியபோது, அவரை வலி மறந்து மனதை வருடும் வகையில், மருத்துவர் ஓர் தமிழ் பாடலை பாடினார்.

அர்ஜுன் நடித்த கர்ணா திரைப்படத்தில் வரும் மலரே மவுனமா என்ற பாடல் ஆகும். அந்த பாடலைக் கேட்ட அந்த சிறுமி, தனக்கும் அந்தப் பாடல் நன்கு தெரியும் என்பதால் அவரும் பாடினார். இருவரும் பாடிய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

https://vimeo.com/734968869
  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?