திடீரென மிரண்ட யானை… கூட்டத்தை நோக்கி ஓடியதால் அலறிய பக்தர்கள் ; பகவதி அம்மன் கோவில் திருவிழவில் பதற்றம்!!

Author: Babu Lakshmanan
28 February 2023, 6:42 pm

கேரளாவில் கோவில் திருவிழாவின் போது யானை திடீரென மிரண்டு பக்தர்களின் கூட்டத்தை நோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவின் பாலகாட்டில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்தக் கோவில் திருவிழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட யானைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.

அப்போது, திடீரென மிரண்டு போன யானை ஒன்று பக்தர்களின் கூட்டத்தை நோக்கி ஓடியது. இதனால், பக்தர்கள் மிரண்டு போயி, அலறியடித்துக் கொண்டு, நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர்.

பின்னர், அந்த யானை சாலைகளில் வாகனங்களுக்கு நடுவே புகுந்து நீண்ட நேரம் கட்டுப்பாடில்லாமல் உலவி வந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

  • Rashmika Mandanna துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?