படம் பார்க்க தியேட்டர் வந்த ரசிகர்களுக்குள் மோதல் : சரமாரியாக ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
13 August 2022, 5:46 pm

கேரளா : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சினிமா காண வந்த ரசிகர்களுக்கு இடையே இரு தரப்பினராக மோதி கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸ் நடித்து வெளியான தல்லு மாலை என்ற திரைப்படம் கேரளா முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கோழிக்கோடு பகுதியில் அமைந்துள்ள திரையரங்கில் தல்லுமாலை திரைப்படம் காண வந்த டோவினோ தாமஸின் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் கும்பலாக கும்பலாக ஒருவருக்கொருவர் மோதி கொண்ட காட்சி சில இளைஞர்களால் செல்போனில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அந்த காட்சிகள் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!