அய்யோ போச்சே… தென்னை மரத்தில் ஏறி ரீல்ஸ்-க்காக சாகசம் செய்ய முயன்ற இளைஞர்கள்.. இறுதியில் நடந்த விபரீதம்..!!

Author: Babu Lakshmanan
24 July 2023, 5:45 pm

கேரள மாநிலம் மலப்புறத்தில் தென்னை மரம் முறிந்து விழுந்து ரீல்ஸ் எடுக்க முயற்சித்த இளைஞர்கள் காயமடைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்கு உட்பட்ட காளி காவு பகுதியில் உள்ள ஆற்றிற்கு அருகில் உள்ள தென்னை மரம் தண்ணீருக்கு மேலே சாய்வாக நின்றது. இதனால், இங்கு வரும் இளைஞர்கள், தென்னை மீது ஏறி ஆற்றில் குதித்து மகிழ்வது வழக்கம்.

இந்த நிலையில், ஏழு இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்காக ரீல் தயாரிக்கும் நோக்கில் சாய்வாக நின்று கொண்டிருந்த தென்னை மீது ஏறி அமர்ந்து இருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக தென்னை மரம் முறிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதனால், தென்னை மீது அமர்ந்திருந்த நான்கு இளைஞர்கள் தண்ணீரில் விழுந்து காயமடைந்தனர். உடனடியாக அவர்களை தனியார் மருத்துவமனையில் பகுதியினர் அனுமதித்தனர்.

அதிக அளவில் தண்ணீர் காணப்பட்டதால் தென்னைமரம் முறிந்த போது கீழே விழுந்தவர்கள் பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் இல்லாமல் தப்பினர். தென்னை மரம் முறிந்து விழும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்