திடீரென இறங்கி வந்த கொம்பன்… காரை நிறுத்தி விட்டு விழுந்து எழுந்திருச்சு ஓடிய குடும்பம் ; அதிர்ச்சி வீடியோ!!
Author: Babu Lakshmanan21 June 2023, 4:59 pm
கேரள மாநிலத்தில் காட்டுப் பகுதியில் இருந்து திடீரென வந்த கொம்பன் யானையை பார்த்து காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிய சம்பவம் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வழிகடவு, நாடுகாணி சுரம் வழியாக இன்று காரில் ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். அப்போது, காட்டிலிருந்து இறங்கி வரும் கொம்பன் யானையை பார்த்து உள்ளனர். யானையை பார்த்ததும் பயந்து காரை சாலையின் ஒருபுறம் நிறுத்த முயன்றபோது, அப்போது காரின் சக்கரங்களும் சேற்றில் மாட்டிக் கொண்டன.
இதில் பதறிப்போன குடும்பத்தார் காரை விட்டு இறங்கி ஓடி உள்ளனர். அப்போது, பெண் ஒருவர் கீழே விழுந்தார். யானையை பார்த்து பதற்றத்தில் விழுந்த அவர், மீண்டும் எழுந்து அங்கிருந்து ஓடிச் சென்றார். ஓடுவதை பார்த்து இவர்களை பின்தொடர்ந்த யானை சிறிது நேரம் சாலையில் நின்று காட்டுக்குள் சென்றனர். ஓடி வந்த இவர்களை அப்பகுதியில் இருந்த மற்றவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.