ஆன்லைனில் பிரியாணி… விரும்பி சாப்பிட்ட பெண்ணுக்கு சில நிமிடங்களில் நடந்த அதிர்ச்சி ; கேரளாவில் மீண்டும் பரபரப்பு

Author: Babu Lakshmanan
7 January 2023, 6:29 pm

கேரளாவில் பிரியாணி சாப்பிட்ட பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசர்கோட்டில் உள்ள துரித உணவுக்கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வருவதற்குள், பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

குழிமந்தி என்ற பிரியாணியை அஞ்சு ஸ்ரீபார்வதி(20) என்ற இளம்பெண் ஆன்லைனில் ஆர்டர் போட்டு சாப்பிட்டுள்ளார். இதனால், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தரமற்ற உணவால் உயிரிழந்தது தெரியவந்தால், உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவில் தரமற்ற உணவுகளால் அடுத்தடுத்து உயிர்பலி ஏற்படுவது ஓட்டல்கள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்து வருகிறது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!