என்னோட முடிவு இதுதான் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த கேஜிஎஃப் நாயகன் யாஷ் பரபரப்பு பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2022, 2:17 pm

கன்னட நடிகர் யாஷ் நடித்து வெளியாக உள்ள கேஜிஎப் திரைப்படம் இரண்டாம் பாகம் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று நடிகர் யாஷ் மற்றும் கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் குழு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

சுவாமி தரிசனத்தை தொடர்ந்து அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து ஆலயத்தின் வெளியே வந்த நடிகர் யாஷ் இடம் பக்தர்கள் போட்டி போட்டு செல்ஃபி எடுக்க முயன்றனர்.

நடிகர் யாஷ் நிருபர்களிடம் பேசுகையில், ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறை திருப்பதி வந்தபோது நேரம் குறைவு காரணமாக ஏழுமலையானை தரிசிக்க இயலவில்லை அப்போது முடிவு செய்தேன் அடுத்த முறை கண்டிப்பாக சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என அதைத்தொடர்ந்து தற்போது சாமி தரிசனம் செய்து உள்ளது மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!