தந்தையுடன் கோவிலுக்கு சென்ற இளம்பெண் கடத்தல் : காரில் கடத்தி செல்லும் திக் திக் சிசிடிவி காட்சிகள் வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2022, 1:30 pm

தந்தையுடன் கோவிலுக்கு சென்ற இளம் பெண்ணை விடியற்காலை நேரத்தில் காரில் கடத்திய நான்கு பேருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீ சில்லா மாவட்டம் முட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரய்யா. தன்னுடைய மகள் ஷாலினியுடன் (வயது 18) சந்திரயா இன்று காலை அதே ஊரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றார்.

சாமி கும்பிட்ட பின் இரண்டு பேரும் கோவிலில் இருந்து வெளியே வந்தனர். அப்போது அங்கு காருடன் காத்திருந்த நான்கு பேர் ஷாலினியை காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.

மகளை கடத்தி செல்பவர்களை தடுத்து நிறுத்த முயன்ற சந்திரய்யா மீது அவர்கள் தாக்குதல் நடத்தி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் பற்றி சந்தரய்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

https://vimeo.com/782820274

சந்திரய்யா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவாகி இருக்கும் இளம்பெண் கடத்தல் தொடர்பான காட்சிகளை கைப்பற்றி ஷாலினியை கடத்தி சென்ற நான்கு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?