சில வருடங்களுக்கு முன் டெல்லியை நடுங்க வைத்த சைக்கோ கொலைகாரன் தான் ரவீந்தர் குமார். இவன், சிறுமிகளை தொடர்ச்சியாக கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, தான் மாட்டிக்கொள்ளக்கூடாது என அந்த சிறுமிகளை கொலை செய்து வந்துள்ளான்.
இந்த கொலையாளியை கடந்த 2015ஆம் ஆண்டு அவனுடைய 24 வயதில் டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு மற்றும் கொலையாளி ரவீந்திர் குமார் குறித்து டெல்லி காவல்துறை கூடுதல் கமிஷனர் விக்ரம்ஜித் சிங் கூறினார்.
குமார் ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் குற்றம் வெளியில் தெரிந்துவிடும் என்று அந்த குழந்தைகளை கொலை செய்து இருக்கிறான்.
2008 முதல் 2015க்கு இடையில், சுமார் 30 குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி உள்ளான் என காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.
கொலையாளி ரவீந்தர் குமார், அரை-ஆபாச திகில் திரைப்படங்களை பார்த்து அதனால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு குற்றங்களை செய்ய துவங்கினான் என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
குமார் குறிவைத்தது எல்லாம் கட்டிட கூலி தொழிலாளர்கள் குழந்தைகளை தான். குமார் அவர்களின் குழந்தைகளை ரூபாய் நோட்டுக்கள் அல்லது இனிப்பு பண்டங்கள் கொடுத்து கவர்ந்து குழந்தைகளை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கட்டிடத்திற்கோ அல்லது காலியான வயல்வெளிக்கோ அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி உள்ளான்.
பின்னர் அடையாளம் தெரியுமோ என்ற பயத்தில் பெரும்பாலான குழந்தைகளைக் கொன்று இருக்கிறான். 2015 இல் 24 வயதில் கைது செய்யப்பட்ட குமார், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் குமாரை ஒரு குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனையை ரவீந்தர் குமாருக்கு வழங்க வேண்டும் என காவல்துறை கேட்டு கொண்டுள்ளது. குமார் மீதான தண்டனை விவரம் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குமார் கைது செய்யப்பட்ட போது தற்போதைய கூடுதல் கமிஷ்னர் விக்ரம்ஜித் சிங், வெளி மாவட்ட டிசிபியாக இருந்தார். விக்ரம்ஜித் சிங் மேலும் கூறுகையில், குமார் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவில் வைத்து இருந்தான்.
தன் பாலியல் இச்சைக்கு கட்டுப்படுத்த கடினமாக இருந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு கொலை செய்ததாகவும் குமார் திடுக்கிடும் தகவலை காவல்துறையிடம் கூறியுள்ளார்.
“பாதிக்கப்பட்டவர்களில் பலர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் குமார் நீண்ட காலம் கொலை சம்பவத்தில் ஈடுபட முடிந்தது. என்று டெல்லி காவல்துறை கூறியுள்ளது.
ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பாதியில் படிப்பை நிறுத்தி, கூலி தொழிலாளியாக வேலை செய்யத் தொடங்கியுள்ளான் கொலையாளி குமார். போதைக்கு அடிமையாகி, போதை அதிகமானவுடன் தான் பாலியல் குற்றசெயல்களில் குமார் ஈடுபட்டு வந்துள்ளான்.
முதன்முதலாக ஆறு வயது சிறுமியின் கொலையை போலீசார் விசாரித்து வந்த போது சிசிடிவி கேமிரா போன்றவற்றை ஆராய்ந்து தான் வடமேற்கு டெல்லியின் ரோகினிக்கு அருகிலுள்ள சுக்பீர் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து குமார் கைது செய்யப்பட்டான்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.