என்னுடன் இருப்பவர்களை குறி வைப்பதற்கு பதில் என்னை கொன்று விடுங்கள் : செய்தியாளர்கள் சந்திப்பில் கதறி அழுத ஸ்வப்னா சுரேஷ்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2022, 11:31 am

கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுர்களுக்கு தொடர்பு உள்ளதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்தார்.

இதையடுத்து, பினராயி விஜயனை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் தரப்பில் வக்கீல் ஆர்.கிருஷ்ணராஜ் ஆஜராகி வாதாடி வருகிறார். இவர் கேரள அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர் ஒருவரை விமர்சித்து முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக வக்கீல் கிருஷ்ணராஜ் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பாலக்காட்டில் உள்ள தனது வீட்டில் வைத்து ஸ்வப்னா சுரேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் உள்பட அனைவரின் மீதும் நான் ரகசிய வாக்குமூலத்தில் அளித்துள்ள புகார்களில் இருந்து எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை.

என்னுடன் இருப்பவர்களைக் குறிவைத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. சரித்குமாரை போலீஸ் பிடித்துச் சென்று ஒரு மணி நேரத்தில் விடுவிப்பார்கள் என்று ஷாஜ் கிரண் கூறினார். அதேபோல நடந்தது. என்னுடைய வக்கீல் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யும் என்றார். அதுவும் நடந்துள்ளது.

என்னைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு என்னைக் கொன்று விடுங்கள். அப்படி நடந்தால் அனைத்து உண்மைகளும் மூடப்பட்டு விடும் என செய்தியாளர்கள் சந்திப்பில் கதறி அழுதார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 736

    0

    0