கொல்கத்தா மாணவி கொடூரக் கொலை வழக்கு.. விசாரணையில் சிக்கிய முன்னாள் டீன் சஸ்பெண்ட்..!

Author: Vignesh
28 August 2024, 7:58 pm

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அரசு மருத்துவமனையின் முன்னாள் டீன் சந்தீப் கோஷ் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் RG Kar அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் மருத்துவர் கருத்தரங்கு அறையில் கடந்த ஒன்பதாம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்டதாக புகார் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், இங்கு பணியாற்றிய முன்னாள் டீன் சந்தீப் கோஷ்விடம் சிபிஐ போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர் மீது மருத்துவக் கல்லூரி தொடர்பான ஒப்பந்தங்கள் வழங்க சம்பந்தப்பட்டவர்களிடம் 20% லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன.

இதை அடுத்து, கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டு சமீபத்தில் இவரது வீட்டில் சோதனை நடந்தது. தொடர்ந்து சிபிஐ உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தியது. இந்நிலையில், முன்னாள் டீன் சந்தீப் கோஷ் ஐ எம் ஏ எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் தற்போது சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 245

    0

    0