தூக்குங்கப்பா அந்த MLA-க்களை; மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் ரிசார்ட்டை புக் செய்யும் அரசியல் கட்சிகள்?..
Author: Vignesh4 June 2024, 1:40 pm
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற முடிந்து. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மக்கள் அளித்துள்ள தீர்ப்பை இன்று காலை 8 மணி முதல் வாசிக்க தொடங்குகிறது தேர்தல் ஆணையம். 543 மக்களவைத் தொகுதிகளில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளை கைப்பற்ற போகிறது யாருக்கு பெரும்பான்மை கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்து வருகிறது.
முன்னதாக, இந்திய அரசியலில் கூவத்தூர் நாடகம் மிகப் பெரிய அளவில் கவனம் பெற்றது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழ்நாட்டில், ஆட்சியை தக்க வைக்க சசிகலா மற்றும் ஓ பன்னீர்செல்வம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதன் விளைவாக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிகழ்வு இந்திய அரசியலில் கூட பெரிய அளவில் கவனம் பெற்றது. அதன் பின்னர், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இதே ரிசார்ட் அரசியல் பரவியது. பின்னர், ராஜஸ்தான், மத்திய பிரதேசங்களுக்கும் கோவாவிற்கும் கூட இதே ரிசார்ட் அரசியல் பரவியது.
தொங்கு சட்டவசபை, அதன் பின் குதிரை பேரம் ஆட்சியை தக்க வைக்க கோடிகளில் பணம் கொடுப்பது எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் தங்கு வைப்பது என்று மிகப் பெரிய அரசியல் நாடகங்கள் நாடு முழுவதும் அரசியல் கட்சிகளால் நடத்தப்பட்டன. இந்நிலையில், 2024 லோக்சபா தேர்தல் தொங்கு நாடாளுமன்றம் உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்பட உள்ளன. தேசிய அளவில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட உள்ளது. அதாவது, 543 தொகுதிகள் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியைப் பிடிக்க முடியும் இப்படிப்பட்ட நிலையில், 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 280 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக தனியாக 230 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கட்சி 98 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கூட்டணி கட்சிகள் 230 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இப்போது, உள்ள சூழலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. தனி மெஜாரிட்டி பெற பாஜகவிற்கு 40 இடங்களுக்கு மேல் இன்னும் கிடைக்க வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவாகவே கருதப்படுகிறது. இதனால் கண்டிப்பாக தேசிய அளவில் தொங்கு நாடாளுமன்றம் உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளன.
பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் அவர்களால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படும். ஏனெனில், மோடி பிரதமராவதற்கு என் டி ஏ கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்காமல் போகலாம். உதாரணமாக நிதிஷ்குமார் ஜேடியு பீகாரில் 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்தில் 14 இடங்களிலும், முன்னிலை வகிக்கிறது. இவர்கள் என்டிஏ கூட்டணியை காங்கிரஸ் இந்தியா கூட்டணி தங்கள் பக்கம் இழுக்க பார்க்கலாம். சில கட்சிகளை உடைக்க பாஜக கூட முயற்சி செய்யலாம். இதனால், பலர் ரிசார்ட்டுக்கு கொண்டு செல்லப்படலாம்.