கால்நடை தீவன ஊழல்…5வது வழக்கிலும் லாலு பிரசாத்துக்கு தண்டனை: ரூ.60 லட்சம் அபராதத்துடன் 5 ஆண்டுகள் சிறை..!!

Author: Rajesh
21 February 2022, 3:42 pm

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழலின் 5வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பீஹார் ராஷ்ட்டிரிய ஜனதா தள கட்சி ஆட்சியில் இருந்த போது முதலமைச்சரான இருந்த லாலு பிரசாத் யாதவ், பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட மாட்டுத்தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 4 வழக்குகளில் அவருக்கு ஒட்டுமொத்தமாக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
இதற்கான தண்டனை விவரங்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்தது. அதில், 5வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 1470

    0

    0