நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் இனி தேசிய விண்வெளி தினம்.. இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2023, 9:06 am

நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் இனி தேசிய விண்வெளி தினம்

பிரதமர் மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று சந்திராயன் -3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பெங்களூர் சென்றார். தென்னாப்பிரிக்கா, கிரீஸ் பயணங்களை முடித்து இந்தியா திரும்பிய பிரதமர் விஞ்ஞானிகள் சந்தித்துள்ளார்.

பெங்களூரு விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்ற பிரதமர் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு சந்திரயான்-3 மிஷன் குறித்து விளக்கியுள்ளார். பின் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் திட்ட இயக்குனர் வீர முத்துவேல் சந்திராயன்-3 எடுத்த புகைபபடங்களை பரிசாக வழங்கினர். அதன்பின் தொடர்ந்து பேசிய அவர் நிலவில் சந்திராயன் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவ சக்தி’ என பெயரிட்டு அழைக்கப்பட உள்ளது.

இந்தியாவின் பெருமையான அசோக சக்கரம் தற்போது நிலவில் பதியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, கிரீஸ் சென்றிருந்தாலும் என் மனம் முழுவதும் இங்குதான் இருந்தது. நமது நாட்டின் கவுரவத்தையும், பெருமையையும் உலகிற்கே நிரூபித்துள்ளோம்.

நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் (ஆக.23) ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும். நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன்.

பழங்கால இந்திய நூல்களில் குறிப்பிட்டுள்ள விண்வெளி தத்துவங்களை இளைய தலைமுறைக்கு காட்ட வேண்டும். விரைவில் இந்திய விண்வெளித் துறை தொழில் வாய்ப்பு 16 மில்லியன் டாலர் மதிப்புக்கு வளர்ச்சி பெறும். விண்வெளி தொழில் வாய்ப்புகள் இரட்டிப்பாகும் என நிபுணர்கள் கணித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் .

மேலும், சந்திராயன்-2 நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு ‘திரங்கா’ (மூவர்ணக்கொடி) என பெயரிடப்பட்டுள்ளது. எந்த தோல்வியும் நமக்கு இறுதியானது அல்ல என்பதை நினைப்பூட்டும் வண்ணம் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி, விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பான பணியால் விண்வெளி துறையில் நமது தேசம் சாதனை படைத்துள்ளது. தேசத்தை பெருமை அடைய வைத்த விஞ்ஞானிகளை சந்தித்து உரையாட போவதாக பிரதமர் மோடி ட்விட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!