லதா மங்கேஷ்கர் உடல் அவரது மும்பை இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது: அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் நேரில் அஞ்சலி..!!

Author: Rajesh
6 February 2022, 3:18 pm

மும்பை: மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் உடல் மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் உயிர் பிரிந்தது.

இதனையடுத்து, லதா மங்கேஷ்கர் உடல் மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. லதா மங்கேஷ்கர் உடலுக்கு திரயுலக பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாடகி லதா மங்கேஷ்கரின் உடலுக்கு இறுதி சடங்கு மராட்டிய மாநில அரசின் மரியாதையோடு நடத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால், இதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுகிறது. இறுதிச்சடங்கு நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ