இயற்பியல் பாடத்துக்கு பதில் பாலியல் பாடம் : மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட LECTURER : பதிலடியாக கிடைத்த தர்ம அடி!!
Author: Udayachandran RadhaKrishnan28 April 2022, 1:59 pm
ஆந்திரா : மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட விரிவுரையாளருக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநில சித்தூர் மாவட்டம் சித்தூரில் உள்ள ஆர்.கே.எஸ்.ஆர் ஜூனியர் கல்லூரியில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கல்லூரி விரிவுரையாளருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.
கல்லூரியில் இயற்பியல் பாடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளராக பணியாற்றிவரும் சோமையா என்பவர் மாணவி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மாணவி இதுகுறித்து பெற்றோருக்கு புகார் தெரிவித்ததையடுத்து நேற்று கல்லூரிக்கு வந்த மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சோமயாவை கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கடுமையாக மாறி மாறி தாக்கத் தொடங்கினர். இதனால் கல்லூரியில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.
இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கல்வி கற்பிக்க வேண்டிய பணியில் இருப்பவர்கள் பாலியல் சீண்டல் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் சோமயாவை உடனே பணிநீக்கம் செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வருக்கு கோரிக்கை விடுத்து சென்றனர்.
இந்த தாக்குதல் சம்பந்தப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாடம் நடத்த வேண்டிய ஆசிரியரே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.