சட்டப்பேரவை துணை சபாநாயகர் திடீர் மரணம் : மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… அரசியல் கட்சியினர் இரங்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2022, 10:53 am

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனோஜ் சின்ஹா மந்தவி செயல்பட்டு வருகிறார்.

மனோஜ் கன்கீர் மாவட்டம் பானுபிரதாபூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். இந்நிலையில், 58 வயதான மனோஜ் சின்ஹாவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனை தொடந்து அவர் தம்தரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், மாரடைப்பு ஏற்பட்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் சின்ஹா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 563

    0

    0