உயிருக்கு அச்சுறுத்தல்? ஆர்எஸ்எஸ் அமைப்பு தலைவர்கள் 5 பேருக்கு துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பிரிவு பாதுகாப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2022, 10:20 am

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் 5 பேருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தன.
இதைத்தொடர்ந்து 5 தலைவர்களுக்கும் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இந்த 5 பேருக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த தலா 2 அல்லது 3 கமாண்டோக்கள் இந்த தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பை வழங்குவார்கள்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இந்த தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 490

    0

    0