ஆறாக ஓடிய மதுபானம் : சும்மா இல்ல… 80 ஆயிரம் லிட்டர்… காலி மைதானத்தில் போலீசார் செய்த செயல்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2022, 1:03 pm

அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகியவற்றை விட ஆந்திராவில் மது விலை அதிகமாக உள்ளது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து ஆந்திராவில் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.

எனவே அந்த மாநிலங்களில் இருந்து மது கடத்துவதை தடுக்க எல்லைகளில் சோதனை சாவடிகளை அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்திற்கு தெலுங்கானாவில் இருந்து கடந்த ஆறு மாதங்களில் கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 80,000 லிட்டர் மதுபானங்களை போலீசார் நேற்று ஜேசிபி எந்திரம் மூலம் அழித்தனர்.

ஏலூரூ நகரில் உள்ள ஆஸ்ரம் மருத்துவமனை அருகே காலி மைதானத்தில் 80,000 லிட்டர் மதுபானங்களை பாட்டில் பாட்டிலாக அடுக்கி வைத்த போலீசார் அவற்றின் மீது ஜேசிபி எந்திரம் ஒன்றை ஏற்றி அழித்து ஒழித்தனர்.

இதனால் அந்த மைதானத்தில் 80 ஆயிரம் லிட்டர் மதுபானம் ஆறாக ஓடியது. அழிக்கப்பட்ட மதுபானத்தின் விலை சுமார் ஒரு கோடிய 25 லட்சம் ரூபாய் என்று போலீசார் கூறுகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 568

    0

    0