குடிநீர் அடி குழாயில் இருந்து கொட்டிய மதுபானம்… அடிச்சுக்காம புடிச்கோங்க.. 24*7 சர்வீஸ் : போலீசாருக்கு அதிர்ச்சி தந்த கிராமம்!!
Author: Udayachandran RadhaKrishnan12 October 2022, 6:15 pm
மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்ததாக இரண்டு கிராமங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது போலீசார் ஒரு கை அடி பம்பை ஒன்றை பார்த்தனர்.
அந்த பம்பை (குழாயை) அடித்த போது தண்ணீருக்கு பதிலாக அதில் மதுபானம் கொட்டியது. இதை பார்த்த அறிந்த போலீஸ் குழு அதிர்ச்சியடைந்தனர். நிலத்தில் சுமார் 7 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மதுபானம் நிரப்பப்பட்ட தொட்டிகளில் இருந்து அந்த் அடி பம்பு மூலம் மதுபானம் வெளியேற்றபட்டதை போலீசார் கண்டு பிடித்து உள்ளனர்.
இந்த சோதனையின் போது மொத்தம் 1200 லிட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர். நிலத்துக்குள் புதைக்கப்பட்டிருந்த டிரம்மில் இருந்து 400 லிட்டருக்கும் அதிகமான மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டன.
நடிகர் சந்தானம் ஒரு படத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது தோட்டத்தில் இனி சரக்குதான் 24*7 சர்வீஸ் அடிச்சுக்காம புடிச்சிக்கோங்க என செல்வார். அது போல குடிநீர் குழாயில் இருந்து மதுபானம் கொட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்தாக இதுவரை 2,600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.