ராஷ்மிகாவையே மிரள வைத்த குட்டி ராஷ்மிகா… என்ன EXPRESSION : வைரலாகும் CUTE வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2022, 6:38 pm

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இரண்டாவது பாகம் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

புஷ்பா முதல் பாகத்தின் தாக்கத்தில் இருந்து, இதுவரை ரசிகர்கள் யாரும் வெளியே வரவில்லை. காரணம் முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் இந்த படத்தில் இடம்பெற்ற வசனங்கள் அனைத்தும் வேறு லெவலுக்கு ரசிகிர் மத்தியில் ரீச் ஆனது.

அந்த வகையில், ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற சாமி பாடலுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ரீல்ஸ் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர்.

அதுபோன்ற ஒரு டான்ஸ் வீடியோவை தான் வெளியிட்டு உருகியுள்ளார் ராஷ்மிகா. சாமி பட பாடலுக்கு பல குட்டீஸ் ஆட்டம் போட, ஒரு குழந்தை மட்டும் கிட்ட தட்ட ரஷ்மிகா போலவே டான்ஸ் ஆடியுள்ளார்.

இவரது இந்த கியூட் டான்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக, இது ராஷ்மிகா கண்களிலும் பட்டுள்ளது, இதனை பார்த்து இந்த குழந்தையை பார்த்தே ஆக வேண்டும் என்றும், ஆனால் அது எப்படி என கேள்வியோடு இந்த வீடியோவை ராஷ்மிகா வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ படு வைரலாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…