டெல்லியில் லிவ் இன் முறையில் உடன் வாழ்ந்து வந்த காதலியை கொலை செய்து 35 துண்டுகளாக அவரது உடலை வெட்டி வீசிய சம்பவம் தலைநகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த வாலிபர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர் மும்பையில் கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்த போது, உடன் பணிபுரிந்து வந்த ஷ்ரத்தா என்ற பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே பழக்கம் காதலாக மலர்ந்தது. இவர்களின் காதல் விவகாரம் ஷ்ரத்தா வீட்டாருக்கு தெரிந்து, அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், வீட்டின் எதிர்ப்பையும் மீறி, அஃப்தப்புடன் டெல்லிக்கு குடிபெயர்ந்து அங்குள்ள மெஹ்ராலி என்ற பகுதியில் வீடு எடுத்து லிவ் இன் முறையில் ஷ்ரத்தா வாழ்ந்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அஃப்தப்புடன் அதிகரித்த காதலால், தனது பெற்றோருடனான தொடர்பை முற்றிலுமாக ஷ்ரத்தா நிறுத்தி விட்டார். சமூகவலைதளங்கள் மூலமாக தனது மகள் டெல்லியில் இருப்பதை அவர்களும் உறுதி செய்து கொண்டனர்.
இதையடுத்து, ஒரு வழியாக டெல்லியில் உள்ள மகள் ஷ்ரத்தாவின் வீட்டை தந்தை விகாஸ் மதன் தேடி கண்டுபிடித்துள்ளார். ஆனால், வீடு பூட்டியிருந்த நிலையில், தனது மகளை காணவில்லை என்று டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியாகியது.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஷ்ரத்தா தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், அஃப்தப்புடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அப்படி தான் கடந்த மே 18ம் தேதி ஏற்பட்ட சண்டையில் அஃப்தப் ஷ்ரத்தாவை தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர், கொலையை எப்படி மறைப்பது என யோசித்த அஃப்தப், ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து, 18 நாட்களுக்கு உடலை டெல்லியின் பல்வேறு வீதிகளில் வீசிச் சென்றுள்ளார்.
இந்த வாக்குமூலத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த டெல்லி காவல்துறை அஃப்தப் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.
பெற்றோரை உதறி தள்ளிவிட்டு காதலுக்கான வந்த பெண்ணை, காதலனே கொடூரமாக வெட்டி துண்டு துண்டுகளாக சாலையில் வீசிச் சென்ற சம்பவம் தலைநகர் மட்டுமல்லாது, இந்தியாவையே உலுக்கியுள்ளது.
சுமாரான நடிகர் நடிகர் சூர்யா தற்போது டாப் நடிகராக வலம் வந்தாலும் அவர் நடிக்க வந்த புதிதில் அவரது நடிப்பை…
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயா பார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.…
கங்குவா தோல்வி சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம்…
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு…
படுதோல்வி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.…
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர்…
This website uses cookies.