தலை வெளியே… கால் உள்ளே : கோவிலில் நகைகளை திருட சென்ற இளைஞர் சுவர் ஓட்டைக்குள் சிக்கிய கலகலப்பு வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2022, 1:59 pm

ஆந்திரா : கோவில் நகையை திருட சுவற்றில் ஓட்டை வழி சென்ற திருடன் திரும்பி வரும் போது ஓட்டையில் இருந்து வெளியே வரமுடியாதபடி சிக்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஜாடுபுடி கிராமத்தில் கிராம தேவதையான எல்லம்மா கோவில் உள்ளது. பாப்பாராவ் என்ற இளைஞர் கோவிலுக்குள் திருட முயற்சித்துள்ளான்.

கோவிலில் சுவற்றில் உள்ள ஆள் நுழையும் அளவில் உள்ள ஓட்டை வழியாக கோவிலுக்குள் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த நகைகளை திருடினான்.பின்னர் நகைகளுடன் அதே ஓட்டை வழியாக வெளியில் வரும்போது வெளியேற முடியாமல் சிக்கி கொண்டான்.

இதனால் அவனது பாதி உடல் கோவிலுக்கு வெளியிலும் பாதி உடல் கோவிலுக்கு உள்ளும் மாட்டிக்கொண்டது. இதனை கவனித்த கிராம மக்கள் அவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாப்பாராவை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கலகலப்பு படத்தில் வரும் காட்சியை போல் உண்மை சம்பவம் நிகழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1593

    0

    0