எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை : பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநரை வெளுத்து வாங்கிய பெற்றோர்.. வைரலாகும் வீடியோ!! .

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2022, 1:09 pm

எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வரின் கார் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பெற்றோர்.

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநராக பணிபுரிபவர் ரஜினிகுமார்.

ஓட்டுநர் ரஜினி குமார் பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அதே பள்ளியில் எல்கேஜி படிக்கும் சிறுமி ஒருவரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த பெற்றோர் அந்த சிறுமியை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி சோர்வாக காணப்பட்டார். அவரிடம் பெற்றோர் நடத்திய விசாரணையின் போது டிரைவர் ரஜினி குமார் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் கடந்த இரண்டு மாதமாக ரஜினி குமார் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரிய வந்தது. இன்று காலை பள்ளிக்கு வந்த சிறுமியின் பெற்றோர் டிரைவர் ரஜினி குமாரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

https://vimeo.com/761758705

டிரைவர் ரஜினி குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 675

    0

    0