இலங்கையை காப்பாற்றுவது பற்றி இறைவன் தான் முடிவு செய்ய வேண்டும் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2022, 5:55 pm

ஆந்திரா : இலங்கையின் நிலை குறித்து இறைவன் தான் முடிவு செய்ய வேண்டும் என திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இலங்கை வடக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சுவாமி தரிசனம் செய்து கொண்டார். சுவாமி தரிசனத்தை தொடர்ந்து ஆலயத்திலுள்ள ரங்கநாயகி மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓதி அவரை ஆசீர்வதித்தனர்.

இதைத்தொடர்ந்து தேவஸ்தானத்தின் சார்பில் அவருக்கு ஆலய தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், இலங்கை வடக்கு மாகாண ஆளுநராக திருப்பதி ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய நிலையில் இலங்கைக்கு அமைதி செழிப்பு மற்றும் முன்னேற்றம் கட்டாயமாக தேவையான ஒன்று. ஆனால் அது எப்போது என்பதை இறைவன் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

  • Missed to act with Rajini.. Famous actress Felt! ரஜினிக்கு மகளாக நடிக்க வேண்டிய சான்ஸ்.. மண்ணை அள்ளி போட்டுட்டாங்க.. புலம்பும் நடிகை!