போலீஸ் ஜீப்பை நைசாக கடத்தி சென்ற லாரி டிரைவர்: 112 கி.மீ ஜாலி ட்ரிப்…காரணத்தை கேட்டு திகைத்துப்போன ஷாக்..!!

Author: Rajesh
6 February 2022, 1:44 pm

பெங்களூர்: கர்நாடகாவில் போலீஸ் ஜீப்பை கடத்தி சென்ற லாரி டிரைவரை கைது செய்த போலீசார் அவர் கூறிய காரணத்தை கேட்டு திகைத்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டம் அன்னிகேரி என்ற பகுதியில் காவல் நிலையம் உள்ளது. கடந்த புதன்கிழமை இரவு இந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் எல்.கே. ஜூலகட்டி பணி முடிந்து வீட்டுக்கு திரும்புவதற்கு தயாரானார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் ஜீப்பை காணவில்லை. மர்ம நபர் யாரோ போலீஸ் ஜீப்பை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஜீப்பை போலீசார் தேட ஆரம்பித்த்தனர். இந்த நிலையில் பையடாகி நகருக்கு அருகில் உள்ள மோட்பென்னூர் என்ற பகுதியில் போலீஸ் ஜீப் ஒன்று தனியாக இருப்பது கண்டு அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். அங்கு சென்று பார்த்தபோது போலீகாரர்கள் யாரும் இல்லை. ஒரு நபர் மட்டும் ஜீப்பின் உள்ளே தூங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி உள்ளூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து போலீஸ் ஜீப்பை மீட்டனர். விசாரணையில் போலீஸ் ஜீப்பை கடத்தி சென்றது அன்னிகேரி டவுனில் வசிக்கும் நாகப்பா ஒய்.ஹடபட் (45) என்பது தெரியவந்தது.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அன்னிகேரி காவல் நிலைய வளாகத்தில் நிற்கும் போலீஸ் ஜீப்பை பார்க்கும் போதெல்லாம் அதனை ஓட்டி பார்க்க வேண்டும் என்ற ஆசை நாகப்பாவின் மனதில் எழுந்து விடும். இந்நிலையில் கடந்த புதன் கிழமை ஜீப் லாக் செய்யப்படாமல் இருந்தது. இதனால் நாகப்பா, நைசாக போலீஸ் ஜீப்பை அங்கு இருந்து ஓட்டிச்சென்றார்.

கர்நாடக மாநிலத்தின் பல இடங்களில் போலீஸ் ஜீப்பை ஓட்டிச் சென்று, தனது நீண்ட நாள் கனவை ஆசை தீர அனுபவித்தார் நாகப்பா. புறப்பட்ட இடத்தில் இருந்து மோட்பென்னூர் வரை சுமார் 112 கி.மீ வரை சென்ற அவர் துக்கம் வந்ததால், ஜீப்பை நிறுத்தி விட்டு துங்கியுள்ளார். அப்போதுதான் பொதுமக்கள் இதனை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசாரிடம் மாட்டியுள்ளார்.
நாகப்பா கூறியதை கேட்டு அதிர்ந்து போன போலீசாருக்கு, அவரை தண்டிப்பதா? இல்லை அவர் கூறிய காரணத்தை கேட்டு சிரிப்பதா? என விழித்தனர். இதனையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1241

    0

    0