வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட ராட்சத லாரி… காட்டாற்றில் நீந்தி உயிர்தப்பிய ஓட்டுநர் மற்றும் க்ளீனர்; வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
13 October 2022, 1:43 pm

ஆந்திராவில் காட்டாற்று வெள்ளத்தின் போது தரைப்பாலத்தை கடக்க முயன்ற ராட்சத லாரி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புக்கராய சமுத்திரம் அருகே இருக்கும் ஏரி சமீபத்தில் பெய்த மழை காரணமாக நிரம்பி வழிகிறது. இதனால், ஏரியில் இருந்து வெளியாகும் தண்ணீர் காட்டாறு ஒன்றின் வழியாக பாய்ந்து ஓடுகிறது.

இந்த நிலையில், தரைப்பாலம் ஒன்றின் மீது வழிந்து ஓடும் காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்ல கலவை இயந்திரத்துடன் கூடிய ராட்சத லாரி ஒன்று முயன்றது. அப்போது, வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட லாரி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர், கிளீனர் ஆகியோர் லாரியிலிருந்து இறங்கி நீந்தி உயிர் தப்பினர்.

இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று லாரியை மீட்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 665

    0

    0