கட்டு கட்டாக பணம்… களைகட்டிய ஐபிஎல் சூதாட்டம்… ரூ.60 லட்சம் பணம் பறிமுதல் : 10 பேரை சுற்றி வளைத்த போலீசார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2023, 10:54 am

கடந்த திங்கட்கிழமை பெங்களூரில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்பாக சூதாட்டம் நடத்திய 10 பேரை சைபராபாத் போலீசார் கைது செய்தனர்.

கடந்த திங்கள்கிழமை பெங்களூரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டி தொடர்பாக ஹைதராபாத்தில் பெருமளவில் சூதாட்டம் நடைபெறுவது பற்றிய தகவல் ஹைதராபாத் போலீசாருக்கு கிடைத்தது.

அதன் அடிப்படையில் ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள சாய் அனுராக் காலனியில் உள்ள வீடு ஒன்றில் போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த 10 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 60 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 5 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வங்கி டெபாசிட், சூதாட்டம் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், செல்போன்கள், லேப்டாப்கள், டிவி ஆகிவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

ஐபிஎல் சூதாட்டத்தின் முக்கிய சூத்திரதாரியாக இருந்த விஜயவாடாவை சேர்ந்த பாண்டு தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?
  • Close menu