காதல் ஜோடி இல்ல களவாணி ஜோடி.. பைக்கில் உலா வந்து செயின் பறிப்பில் ஈடுபடும் லவ்வர்ஸ்..100 கி.மீ வேகத்தில் சிட்டாய் பறந்த வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2024, 7:00 pm

காதல் ஜோடி இல்ல களவாணி ஜோடி.. பைக்கில் உலா வந்து செயின் பறிப்பில் ஈடுபடும் லவ்வர்ஸ்..100 கி.மீ வேகத்தில் சிட்டாய் பறந்த வீடியோ!

பைக்கில் உலா வரும் காதல் ஜோடி செயின் பறிப்பில் ஈடுபடும் சம்பவம் குறித்த வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் இந்த சம்பவம் நந்துள்ளது, அந்த பகுதியில் அதிகளவு செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் ஸ்கூட்டரில் உலா வரும் காதல் ஜோடி ஒன்று இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. ஸ்கூட்டரை காதலன் ஓட்ட, பின்னால் அமர்ந்திருக்கும் காதலி பெண்களின் கழுத்தில் உள்ள தங்க சங்கிலிகளை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி செல்வது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

போலீசுக்கு இவர்களை பிடிப்பது கடும் சவாலக உள்ள நிலையில், நலகொண்டா மாவட்டத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்து 4 சவரன் தங்க செயினை பறித்து சென்றுள்ளனர்.

இதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் காதல் ஜோடியை விரட்டிச் சென்றுள்ளனர். ஆனால் அந்த ஜோடியோ 100 கி,மீ வேகத்தில் பைக்கை ஓட்டி தப்பியுள்ளனர்.

பல கிலோ மீட்டர் தூரத்திற்கு இளைஞர்கள் பிடிக்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி கேமராவை பதிவு காட்சிகள் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

100 கி,மீ வேகத்தில் இருசக்கர வாகனத்தில் காதல் ஜோடி தப்பித்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!