MADE FOR EACH OTHER..? டிரெண்டிங்கில் பிரதமர் மோடி – இத்தாலி பிரதமரின் செல்பி… சுப்பிரமணிய சுவாமியின் பதிவால் சர்ச்சை!!

Author: Babu Lakshmanan
2 December 2023, 1:18 pm

பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக்கொண்ட செல்பி குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி போட்ட பதிவு பெரும் சர்ச்சையாகியுள்ளது.

COP28 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி துபாய்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதேபோல, இந்த மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்பட பல்வேறு நாட்டு பிரதமர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டின் போது, அனைத்து நாட்டு பிரதமர்களும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், செல்பியும் எடுத்துக் கொண்டனர்.

அந்த வகையில், இந்திய பிரதமர் மோடியும், இத்தாலிய பிரதமர் மெலோனியும் சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டனர். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது இந்த இரு தலைவர்களும் சிரித்து பேசி வார்த்தை பரிமாற்றங்கள் கொண்டனர்.

தற்போது, COP28 மாநாட்டிலும் இருவரும் சிரித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட குறித்து பலரும பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதோடு, Meloni மற்றும் Modi பெயரை இணைத்து Melody எனும் ஹேஷ்டேக்கை இத்தாலி பிரதமர் பதிவிட்டிருந்ததும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் மெலோனியின் செல்பி புகைப்படத்தை பகிர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி, இருவரும் made for each other என பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக X தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- இந்தியாவுக்கு கிடைத்த மற்றொரு இத்தாலி..? ஏற்கனவே இருப்பவர் கணவனை இழந்தவர். தற்போதை நபர் கணவனை விவகாரத்து செய்தவிட்டு பிரதமரானவர். நம்ம பிரதமரோ மனைவியை ஒதுக்கி வைத்தவர். எனவே, made for each other,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுப்ரமணியன் சுவாமியின் இந்தப் பதிவு பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் எழச் செய்துள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 413

    0

    0