கொடூர கவுரவக் கொலை ; மகள் மற்றும் காதலனை கொன்று முதலைகள் ஆற்றில் உடலை வீசிய அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
19 June 2023, 2:25 pm

தங்களின் 18 வயது மகளையும், அவரது காதலனையும் கொடூரமாக கொலை செய்து, முதலைகள் இருக்கும் ஆற்றில் இருவரின் சடலங்களையும் பெண்ணின் பெற்றோர் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மொரேனாவில் ரத்தன்பாசி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவானி தோமர் (18). இவர் அருகில் உள்ள பலுபு கிராமத்தைச் சேர்ந்த ராதிஷ்யம் தோமர் (21) என்னும் வாலிபரை காதலித்து வந்தார். ஷிவானியின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஜுன் 3ம் தேதி ராதிஷ்யமையும், ஷிவானியையும் காணவில்லை. இருவரும் வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனால், ராதிஷ்யமின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

அதாவது, ஷிவானியின் தந்தையிடம் நடத்திய விசாரணையில், தனது மகளையும், அவரது காதலனையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கடந்த ஜூன் 3ம் தேதி இருவரையும் சுட்டுக் கொலை செய்து விட்டு, அவர்களின் உடலில் பெரிய கற்களைக் கட்டி, முதலைகள் நிறைந்த சம்பல் ஆற்றில் வீசியதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2000க்கும் மேற்பட்ட முதலைகள் இருக்கும் சம்பல் ஆற்றில் இருவரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Nayanthara calls off Lady Super Star லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?
  • Close menu