300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி… சோகத்தில் முடிந்த 55 மணிநேர போராட்டம் ; ம.பி.யில் சோகம்…!!!

Author: Babu Lakshmanan
8 June 2023, 8:02 pm

மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 6ம் தேதி செஹோர் மாவட்டம் மொகவாலி கிராமத்தில் 55 அடி ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் குழந்தை தவறி விழுந்தது. இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 3வது நாளாக இன்றும் மீட்பு பணி தொடர்ந்தது.

குழந்தை சுவாசிக்க வசதியாக, ஆழ்துளை குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், 55 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் குழந்தையை மீட்டனர். மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!