ஆதரவு வாபஸ்… முடிவுக்கு வருகிறது மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்? நாளை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவு : ஏக்நாத் சொன்ன பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2022, 9:33 am

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா கட்சி தலைமையிலான அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த வேளையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் முன்னதாக குஜராத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கிய நிலையில், தற்போது அசாம் மாநிலத்தில் முகாமிட்டு சிவசேனா அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதனால், ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 16 மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து,அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர். அதன்படி,தனது தலைமையிலான 38 எம்எல்ஏக்கள் சிவசேனா கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஏக்நாத் சிண்டே உச்சநீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளதாக கூறப்பட்டது. இதனால்,சிவசேனா கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

இந்நிலையில்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

நேற்றிரவு மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த பாஜக தலைவர் தேவேந்திர பாட்னாவிஸ் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்திருந்த நிலையில்,முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

அதே சமயம்,நாளை நடைபெறும் நமிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவுள்ளதாக சிவசேனாவை செர்ந்த அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் சிண்டே பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 788

    0

    0