அதிகாலையில் கேட்ட சத்தம்… திடீரென பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்த சம்பவம்… 26 பேர் உயிரிழந்த சோகம் ; பிரதமர் மோடி இரங்கல் ..!!
Author: Babu Lakshmanan1 July 2023, 11:29 am
மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.
யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சம்ருத்தி மஹாமார்க் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பேருந்தின் டயர் வெடித்தது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, உடனே பேருந்து தீப்பற்றி எரிந்தது.
இதில் பேருந்து முழுவதும் எரிந்ததில், அதனுள் இருந்த பயணிகளில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை என்று அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடியும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
0
0