தேர்தல் ஆணையம் வெளியிடும் முக்கிய அறிவிப்பு.. பாஜக அல்லாத ஆளும் மாநில கட்சிகளுக்கு நிம்மதி!!!
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆலோசனையில் இருந்து வரும் நிலையில் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17ந் தேதியுடன் முடிவடைகிறது.
மற்ற மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு 5 மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
இது தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் தேர்தல் கமிஷன் சார்பில் ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து காவல் மற்றும் பொது-செலவின தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தி அமைதியான முறையில் தேர்தல் முடிப்பதற்கான வியூகங்களை வகுக்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
இந்த நிலையில் தெலங்கானா, மிசோரம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பகல் 12 மணிக்கு அறிவிக்கிறது. டெல்லியில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட உள்ளார்.
மேற்கண்ட 5 மாநிலங்களில் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரசும், தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மிசோரத்தித்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தற்போதை சாத்தியமில்லாததையே இந்த அறிவிப்பு காட்டுவதால் பாஜக அல்லாத மாநிலங்களை ஆளும் மற்ற கட்சியினருக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.