பிரதமர் மோடியை எதிர்த்ததால் மாலத்தீவு ஆளுங்கட்சிக்கு மக்கள் கொடுத்த பரிசு… மேயர் தேர்தலில் அதிர்ச்சி தோல்வி!!
Author: Udayachandran RadhaKrishnan14 January 2024, 11:14 am
பிரதமர் மோடியை எதிர்த்ததால் மாலத்தீவு ஆளுங்கட்சிக்கு மக்கள் கொடுத்த பரிசு… மேயர் தேர்தலில் அதிர்ச்சி தோல்வி!!
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் கடந்த சில வாரங்களாகவே பிரச்சினை தான் இருக்கிறது.. இந்தியப் பிரதமர் மோடி குறித்து மாலத்தீவைச் சேர்ந்த துணை அமைச்சர்கள் சிலர் சர்ச்சை கருத்துகளைக் கூறினர். இது பெரும் விவாதமாக மாறியது.
இதை பாலிவுட் பிரபலங்கள் தொடங்கி பலரும் கண்டித்தனர். இதையடுத்து மாலத்தீவைப் புறக்கணிப்போம் என்ற ஹேஷ்டேக்கும் இணையத்தில் டிரெண்டிங் ஆனது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவைக் கடுமையாகப் பாதித்தது.
இதற்கிடையே இப்போது ஆளும் மாலத்தீவு அரசுக்கு அவர்களின் சொந்த நாட்டிலேயே நல்ல அடி கிடைத்துள்ளது. மாலத்தீவு தலைநகர் மாலேயில் சமீபத்தில் மேயர் தேர்தல் நடைபெற்றது. அதில் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இது தற்போது அதிபராக உள்ள முகமது முய்ஸுவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சி வேட்பாளரை வீழ்த்தி மாலத்தீவு ஜனநாயக கட்சியின் ஆடம் அசிம், மாலேயின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபர் தேர்தலில் வெல்லும் வரை முய்ஸு தான் இந்த பதவியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடவே முய்ஸு தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
இத்தனை காலம் முய்ஸு கட்சி வசம் இருந்த மாலத்தீவு தலைநகர் மாலே மேயர் பதவி இப்போது எதிர்க்கட்சிகள் வசம் சென்றுள்ளது. அசிமின் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்த தேர்தலில் வென்ற ஆடம் அசிம் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். இந்தக் கட்சியைத் தலைமை தாங்கி வரும் முன்னாள் அதிபர் முகமது சோலிஹ் இந்திய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர். இவர் அதிபராக இருந்த சமயத்திலேயே இந்தியா மாலத்தீவில் ஏகப்பட்ட முதலீடுகளை செய்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவும் மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால், கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் இவரைச் சீன சார்பு தலைவரான முய்ஸு தோற்கடித்திருந்தார்.
இதற்கிடையே அதற்குப் பழிவாங்கும் விதமாக இப்போது மாலே மேயர் பதவியை முய்ஸு கட்சி தட்டி தூக்கியுள்ளது. அசிம் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. இந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்குப்பதிவே பதிவாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேயர் தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி முய்ஸு கட்சிக்கு ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதிபர் தேர்தலில் முய்ஸு தோற்று இருந்தாலும் கூட, இன்னும் நாடாளுமன்றம் இந்த மாலத்தீவு ஜனநாயக கட்சி கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இந்த நேரத்தில் மாலே மேயர் பதவியும் அவர்கள் வசம் வந்தது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முய்ஸு அரசின் மூன்று துணை அமைச்சர்கள் சர்ச்சை கருத்துகளைக் கூறியதால் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இந்த மேயர் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. அதேநேரம் முய்ஸு இன்னுமே சீன ஆதரவு நிலைப்பாட்டையே எடுக்கிறார். அவர் சமீபத்தில் சீனாவுக்குச் சென்று திரும்பினார். அப்போதும் கூட முய்ஸு மாலத்தீவு சீன உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது.