மனசு மாறிய மம்தா பானர்ஜி… மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உறுதியானது.. I.N.D.I.A கூட்டணியில் ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
23 February 2024, 9:24 am

மனசு மாறிய மம்தா பானர்ஜி… மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உறுதியானது.. I.N.D.I.A கூட்டணியில் ட்விஸ்ட்!

காங்கிரஸ் கட்சி பாஜகவிற்கு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக 2 பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு உறுதியாகி உள்ளது.

டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது போக உத்தரபிரதேசத்தில் 17 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும், மீதமுள்ள 63 இடங்கள் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) மற்றும் இந்திய கூட்டணியின் மற்ற கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் தற்போது மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் உடன் காங்கிரஸ் பேச்சு வார்த்தையை முடிக்கும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி அங்கே உள்ள 42 லோக்சபா இடங்களில் 5-7 இடங்களை பெற்றுக்கொள்ள காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளதாம். காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் கூறிய நிலையில் தற்போது மம்தா பானர்ஜி இறங்கி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியும் மிக குறைவான இடங்களை பெற்றுக்கொண்டு, கூட்டணியை இறுதி செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது

  • Trisha who became the heroine in one night ஒரே நைட்டுல ஹீரோயின் ஆன திரிஷா.. இதுதாங்க தலையெழுத்து!