வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்றால் அதுதான் கடைசி தேர்தல் : மம்தா பானர்ஜி சொன்ன விஷயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2023, 6:26 pm

பீகார் மாநிலம் பாட்னாவில் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. அடுத்த கட்டமாக 2-வது கூட்டம் காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அடுத்த கூட்டத்தில் இன்னும் ஆழமாக விவாதிப்போம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் செயல்பாடு இங்கிருந்து தொடங்கியுள்ளது. பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வரலாற்றை மாற்றியமைக்கும்.

மத்திய விசாரணை அமைப்பை தவறாக பயன்படுத்தி வருகிறது பாஜக; பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்.பாஜக வரலாற்றை மாற்ற முனைகிறது, நாங்கள் வரலாற்றை காப்பாற்ற நினைக்கிறோம்; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அதுதான் கடைசி பொதுத்தேர்தலாக இருக்கும் தெரிவித்துள்ளார்.

  • Trisha who became the heroine in one night ஒரே நைட்டுல ஹீரோயின் ஆன திரிஷா.. இதுதாங்க தலையெழுத்து!